புரட்சி கலைஞர் விஜயகாந்தை வைத்து செந்தூரப்பூவே எனும் வெற்றி படத்தை இயக்கியவர் தேவராஜ். இந்த படத்தில்தான் ராம்கியும் நிரோஷாவும் முதல்முதலாக ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் தேவராஜ் இன்று மரணமடைந்தார். செந்தூரப்பூவே படத்தை தொடர்ந்து இளையராகம் எனும் படத்தை இயக்கிய இவர், அதன்பின் சில தெலுங்கு சீரியல்களையும் இயக்கியிருந்தார்.