திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கடவுளே கேப்டனே, உணர்ச்சிவசப்பட்ட மக்கள்.. சித்தர் சமாதியாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்

Vijayakanth: இன்று மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காலையிலிருந்து சீமான், ஓ பன்னீர்செல்வம், அண்ணாமலை என பலர் நினைவிடத்திற்கு வந்த அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல் கமல், ரஜினி என பிரபலங்களும் சோசியல் மீடியாவில் பதிவுகளை போட்டிருந்தனர். மேலும் இன்றைய நாளில் விஜயகாந்த் நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

காலையிலேயே பொதுமக்கள் தொண்டர்கள் என அனைவரின் வரவும் இருந்தது. அதற்கேற்றார் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்ததால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அதேபோல் மக்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் காலை 11 மணி வாக்கில் கருடன் நினைவிடத்தை சுற்றி வந்ததுதான்.

சித்தர் சமாதியாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்

ஏற்கனவே விஜயகாந்த் உடலை தீவு திடலில் இருந்து கொண்டு வரும்போது இப்படித்தான் கருடன் வட்டமிட்டது. உண்மையிலேயே அனைவரையும் புல்லரிக்க வைத்த சம்பவம் தான் அது.

அதேபோல் இன்றும் நடந்தது அங்கு இருந்தவர்களை சிலிர்க்க வைத்து விட்டது. உடனே பரவசத்துடன் அங்கிருந்த மக்கள் கடவுளே கேப்டனே என கோஷமிட ஆரம்பித்துவிட்டனர்.

அதன் பிறகு சுற்றி இருந்தவர்கள் அவர்களை அமைதிப்படுத்தி இருக்கின்றனர். அதேபோல் வெளிநாட்டில் இருந்தும் கூட கேப்டன் நினைவிடத்தை காண ரசிகர்கள் வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

அது மட்டும் இன்றி சிலர் கேப்டனை கடவுளாக நினைத்து விரதம் இருந்து மாலை போடுவது, முடி காணிக்கை செலுத்துவது போன்ற நிகழ்வுகளும் இன்றைய நாளில் நடந்திருக்கிறது.

இதை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இப்படி ஒரு பாக்கியம் எந்த மனிதனுக்கும் கிடைக்காது.

வாழும்போதே மனித தெய்வமாக இருந்த விஜயகாந்த் இப்போது கடவுளாகவே மாறிவிட்டார். அவருடைய நினைவிடம் சித்தர் சமாதியாக மாறிவிட்டது என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

Trending News