Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்ற விஜயகாந்த்.. உடல்நலம் குறித்து விசாரித்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் எழுபதுகளில் அறிமுகமாகி பின் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த் அவர்கள் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது அவரின் திறமையான நிர்வாகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார் .
இவ்வாறு நடிப்பிலும் அரசியலிலும் சிறந்து விளங்கிய விஜயகாந்திற்கு சமீப காலமாகவே உடல்நிலையில் குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு சென்று வந்துகொண்டிருந்தார். தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தல் தேர்தலில் கூட விஜயகாந்த் போட்டியிட முடியவில்லை. பிரச்சாரத்திலும் எதுவும் பேசாமல் கையை மட்டுமே அசைத்து வந்தார் .
கட்சி சம்பந்தப்பட்ட முடிவுகளை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகுமார் தான் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜயகாந்த் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

vijayakanth-cinemapettai
மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின் கொரோனா காரணமாக அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த நிலையில் தற்போது முழு உடலை மறைக்கும் கோட், மாஸ்க்,தொப்பி அணிந்து தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் விமானநிலையத்தில் சக்கர நாற்காலியில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விஜயகாந்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் கொண்டுள்ளனர்.
