மீண்டும் கர்ஜிக்கும் குரலுடன் விஜயகாந்த்.. களைகட்ட போகும் அரசியல்

மீண்டும் விஜயகாந்த்

சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்பு நாக்கை துருத்தி கேள்வி கேட்ட விஜயகாந்த் இப்பொழுது பழைய பன்னீர் செல்வமா திரும்பி வரப் போகிறார். அவரது குரலை கேட்க தேமுதிகவினர் ஆர்வமாக உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிங்கப்பூரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொண்டையில் சிறு பிரச்சினை இருந்தது அது இப்போது சரியாகி வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பின்பு அமெரிக்காவில் டிரீட்மெண்டுக்காக சென்ற விஜயகாந்த் மற்றும் லதா சிகிச்சை பெற்று இடையில் அக்வா மேன் படத்தை லதாவுடன் கண்டு மகிழ்ந்தார். அந்த புகைப்படங்களும் வெளிவந்து தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

தந்தையின் இடத்தை நிரப்புவதற்கு அவரது மகன் விஜய் பிரபாகரன் அரசியலில் குரல் கொடுக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவர் அமெரிக்காவில் உள்ள தினத்தந்தி விஜயகாந்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்பு அவருடன் பிப்ரவரி மாசம் விஜயகாந்த் திரும்புவார் என செய்திகள் வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஜயகாந்த் தனது பழைய கர்ஜித்த குரலுடன் திரும்பி வருவார் என தேமுதிகவினர் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே தேமுதிகவில் கடும் போட்டி எழுந்துள்ளது. அதனை எப்படி சமாளிப்பார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment