Entertainment | பொழுதுபோக்கு
175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்.. கேப்டனின் அசத்தல் லிஸ்ட்
விஜயகாந்த் நடித்த பல படங்கள் ஹிட அடித்தன. அதிலும் ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்தார். அனைத்து தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஓடவில்லை என்றாலும் நிறைய கிராமத்தில் உள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக 175 நாட்கள் ஓடின.
வைதேகி காத்திருந்தாள்

vaithegi-kaathirunthal
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தில் ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது.
ஊமை விழிகள்

oomai-vizhikal
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஊமை விழிகள். இப்படத்தில் சந்திரசேகர், ரவீந்திரன், கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மனோஜ் கியான் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் விஜயகாந்திற்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
அம்மன் கோயில் கிழக்காலே

amman-kovil-kizhakkaley
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அம்மன் கோவில் கிழக்காலே. இப்படத்தில் ராதா, செந்தில், ஸ்ரீவித்யா மற்றும் ராதாரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மாநகர காவல்
தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநகர காவல். இப்படத்தில் லட்சுமி, ஆனந்தராஜ மற்றும் செந்தில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார். தோடி ராகம் பாடவா என்ற பாடல் நன்றாக ரீச் ஆனது. போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் அழகாக இருப்பார் விஜயகாந்த்.
சேதுபதி ஐபிஎஸ்
பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சேதுபதி ips. இப்படத்தில் நாசர், மீனா, ஸ்ரீவித்யா, செந்தில் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார் விஜயகாந்த்.
செந்தூரப்பூவே

senthoora-poove
பி ஆர் தேவராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் செந்தூர பூவே. இப்படத்தில் சந்திரசேகர், ஸ்ரீபிரியா, ராம்கி, மற்றும் செந்தில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மனோஜ் க்யான் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்று படமும் வெற்றி பெற்றது. Chinna Kannan எனும் பாடல் நல்ல வெற்றியைப் பெற்றது.
பூந்தோட்ட காவல்காரன்

poonthotta-kaavalkaran
செந்தில்நாதன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன். இப்படத்தில் ராதிகா, சந்திரசேகர நாசர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும்.
சட்டம் ஒரு இருட்டறை

sattam-oru-iruttarai
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தில பொம்மி மாதேவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். விஜயகாந்த் படம் மாபெரும் வெற்றி தேடிக் கொடுத்தது.
பொன்மனச் செல்வன்

ponmana-selvan
பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்மனச் செல்வன். இப்படத்தில் ஷோபனா, ஜெமினி கணேஷ், சரோஜாதேவி, கவுண்டமணி, ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் விஜயகாந்திற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
