Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்.. அவருக்கு என்னாச்சு, எப்போது வீடு திரும்புகிறார்?
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழு பரிசோதனை செய்து கொள்வதற்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்தனர். அடுத்த ஆண்டு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தலை சந்திக்க போகும் தேமுதிகவிற்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்று விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்றும், இன்று டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகும் தேமுதிகவிற்கு இது ஒரு பரீட்சையாக பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் பணிக்கான ஆலோசனைகள் நடைபெற்று முழு முயற்சியில் தேமுதிக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே தற்போது சிதறிக் கிடக்கும் தமிழ்நாடு அரசியலை சரியான பாதைக்கு கொண்டு வர முடியும் என மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
கண்டிப்பாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் விஸ்வரூபம் எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது மக்கள் வட்டாரம்.
