Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

போலீஸ் அதிகாரியாக கலக்கிய விஜயகாந்தின் 7 படங்கள்.. மறக்க முடியாத கேப்டனின் வெற்றிகள்

vijayakanth-police-movies

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான படங்களின் வரிசைக்களை தற்போது பார்க்கலாம்.

மாநகர காவல்:

managara-kaval-full-movie-online

managara-kaval-full-movie-online

தியாகராஜன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாநகரக் காவல். இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சுமா நடித்திருப்பார், நம்பியார், லட்சுமி, நாசர், ஆனந்தராஜ், செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் புரொடக்ஷன் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் 150 நாட்களை தாண்டி தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கில் சிட்டி போலீஸ் என்று ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

கேப்டன் பிரபாகரன்:

captain-prabhakaran-full-movie-online

captain-prabhakaran-full-movie-online

செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்தது கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், சரத்குமார், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பெரும் வெற்றி கொடுத்தது.

உண்மை சம்பவமான சத்தியமங்கலம் வீரப்பனின் கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. அற்புதமான விஷயம் என்னவென்றால் விஜயகாந்துக்கு இது 100வது படம், மன்சூரலிகான் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் இந்த படத்தின் தலைப்பை பார்த்து பாராட்டியும் உள்ளார்.

சேதுபதி ஐ.பி.எஸ்:

sethupathy-ips-full-movie-online

sethupathy-ips-full-movie-online

பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்தது சேதுபதி ஐ.பி.எஸ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். ஒரு போலீஸ் அதிகாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக தத்ரூபமாக அப்போதே வெளிக்கொண்டு வந்து இருப்பார் பி.வாசு.

இந்த படத்தின் படப்பிடிப்பு 180 நாட்களில் முடிந்ததால் இது சாதனையாக கருதப்பட்டது. விஜயகாந்துக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம், இந்த படத்தின் வெற்றியை வைத்து ரகுபதி ஐ.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்ரியன்:

sathriyan-full-movie-online

sathriyan-full-movie-online

சுபாஷ் இயக்கத்தில் 1990ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி, திலகம் நடிப்பில் வெளிவந்தது சத்திரியன். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். மணிரத்தினத்தின் துணை இயக்குனராக வேலை பார்த்தவர் சுபாஷ். இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இருப்பார் என்பது குறிப்பிடதக்கது. கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி இந்த படம் திரையிடப்பட்டது.

ஊழலில் ஊறிப்போன என்ற அரசியல்வாதியை போலீஸ் அதிகாரியாக நேருக்கு நேர் நின்று போராடும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை மிக அற்புதமாக எடுத்திருப்பார்கள். பன்னீர் செல்வம் என்ற கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று, இந்த படத்தில் வரும் ‘சத்திரியனுக்கு சாவே கிடையாது’ என்ற வசனம் ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டது என்றே கூறலாம்.

ஆனஸ்ட்ராஜ்:

honest-raj-full-movie-online

honest-raj-full-movie-online

கேஷவ் இயக்கத்தில் 1894 ஆம் ஆண்டு வெளிவந்தது ஆனஸ்ட்ராஜ். விஜயகாந்துக்கு ஜோடியாக கௌதமி நடித்திருப்பார், இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருப்பார். தேவன், மனோரமா, செந்தில், விஜயகுமார், நிழல்கள் ரவி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். 90-களில் காவல் அதிகாரியாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த படத்தை தெலுங்கில் போலீஸ் கமெண்டு என்று ரீமேக் செய்யப்பட்டது.

புலன்விசாரணை:

pulan-visaranai-full-movie

pulan-visaranai-full-movie

செல்வமணி இயக்கத்தில் 1990களில் வெளிவந்த படம் புலன் விசாரணை. இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, நம்பியார், ராதாரவி, ஆனந்தராஜ், சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 150 நாட்களை தாண்டி இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது, பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணை படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வல்லரசு:

vallarasu-full-movie-online

vallarasu-full-movie-online

மகாராஜன் இயக்கத்தில் 1900 ஆண்டு வெளிவந்தது வல்லரசு. விஜயகாந்த் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார், இந்த படத்தில் பி.வாசு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப்படமும் விஜயகாந்தின் தமிழ் சினிமா வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படி போலீஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த் தனது உண்மையான அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் இன்று உடல்நிலை குறைவால் சினிமா அரசியலை விட்டு சற்று விலகி உள்ளார். மீண்டும் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சி அமையும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Continue Reading
To Top