எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், ஒரு சினிமா ஹீரோவுக்கான தோற்றமும் இல்லாமல் `இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து இன்று `கேப்டன்’ ஆக முன் நிற்கிறார் விஜயகாந்த்.

கமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் திரை உலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்த சமயத்தில், தனக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்தவர். விஜயகாந்த் என்று சொன்னாலே… `ம்ஹூம்’ என நாக்கைக் கடிப்பதும், சிவப்பு கண்களைக் கொண்டு கேமிராவை முறைத்துப் பார்ப்பதுதான் பலருக்கும் தெரியும்.

ஆனால், விஜயகாந்த் சாதனை பட்டியல் நிச்சயம் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பரதன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை, ராஜ நடை, செந்தூரப் பூவே, அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி கந்திருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் உள்படப் பல படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர்.

அதிகம் படித்தவை:  சர்கார் திருடப்பட்ட கதையா.? அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்.!

ரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு, கார்த்தி என அந்த காலத்தின் முன்னணி நட்சத்திரங்களின் 100வது படம் கூட வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்’ வெள்ளிவிழாவைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.vijayakanth

கடனில் தமிழ் திரைப்பட மூழ்கியிருந்தபோது கடல் கடந்து தமிழ் சினிமா நட்சத்திரங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி கடனை அடைத்தவர் விஜயகாந்த்.

தனது படங்களில் தேசத் துரோகிகளிடம் கோபமாகப் பேசும்போது அதை எழுதி வைத்த வசனமாகப் படிக்காமல், தனது ஆழ்மனதில் இருந்து வரும் கோபங்களை வசனங்களாகப் பேசி நடிப்பில் அசத்திருப்பார். காமெடி கதாப்பாத்திரம் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை தனது நடிப்பு மூலமாக ஈர்த்த ரசிகர்கள் ஏராளம்.

அதிகம் படித்தவை:  சூப்பர் ஹிட்டாக வேண்டிய விஜய் படம் சதியால் வீழ்ந்த கதை தெரியுமா?

நடிகர்களில் யாரும் செய்யாத அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டாரோ அதேபோல் அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை உயர்ந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருக்க, தற்போது பல பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.

இதில் உங்களுடன் நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என கேட்ட போது ‘விஜய்யின் லெவலே தற்போது வேறு, நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்’ என பளீரென கூறியுள்ளார்.

மேலும், தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து கேட்கையில் ‘அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவே மாட்டேன்’ என்று பதில் அளித்துள்ளார்.