கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமான சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறத் தவறியது. தொடர்ந்து வேறு படங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

மதுரை வீரன்

பின்னர் ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையா இயக்கும் முதல்  படத்தில் சண்முகப் பாண்டியன் தான் ஹீரோ என்ற அறிவிப்பு வந்தது. படத்திற்கு மதுரை வீரன் என்று  டைட்டில் வைத்தார்கள்.

அதிகம் படித்தவை:  மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா ?

இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.

Premalatha, Shanmuga Pandian, PG Muthaiah @ Madhura Veeran Movie First Look Launch Stills
Captain Vijayakanth, Shanmuga Pandian, PG Muthaiah

இந்த படத்தில் விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன், சமுத்திரகனி, மீனாக்ஷி, நான் கடவுள் ராஜேந்திரன் வேல ராமமூர்த்தி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். வி ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.முத்தையா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். பி..ஜி.முத்தையா அவர்கள் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீஸர் ஆகஸ்ட் மாதம் வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அதிகம் படித்தவை:  ட்ராப் ஆகிவிட்டதா அடுத்த படம்?- அதிர்ச்சி கொடுக்கும் தனுஷ்

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘என்ன நடக்குது நாட்டுல…’ என்ற பாடல் வெளீயானது.

Enna Nadakuthu Nattula- Single Track Launch

இந்த பாடல் சமூகத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து  காட்டும் விதமாக அமைந்துள்ளது. இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி பாடியுள்ளார்

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நேரத்தில் , மதுரை வீரன் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்கள் நலம் விரும்பிகள்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

டீஸர் பார்க்கும்  பொழுதே உங்களுக்கே தெரியும் இது கண்டிப்பாக ஷண்முக பாண்டியனுக்கு நல்ல ஒரு பிரேக் த்ரூ கொடுக்கும் படமாக அமையும் என்று.