வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மீனாவின் தம்பி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயா, டிராமா போடும் முத்து.. வசமா சிக்க போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், லாயர் விஜயாவை பார்த்து பணத்தைக் காட்டி சத்தியா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கும் விதமாக கைப்பட லெட்டர் எழுதி சத்யா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். உடனே லாயர், முத்துவுக்கு போன் பண்ணி உங்க அம்மா கேசை வாபஸ் வாங்கி விட்டார் என்று சொல்கிறார். இதை கேட்டதும் முத்து எப்படி எங்க அம்மா ஒத்துக்கொண்டார் என்று கேட்கிறார்.

அதற்கு லாயர் அதற்குத்தானே நாங்க படித்திருக்கிறோம், எப்படி பேசி யாரை எப்படி கவுக்கணும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் இனி சத்யா மீது எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிவிட்டார். ஆனால் விஜயா பணத்துக்காகத்தான் கேசை வாபஸ் வாங்கி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இது தெரியாத முத்து, அம்மா மனசு மாறி சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கி விட்டார் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சந்தோசமாக சொல்கிறார்.

உடனே அண்ணாமலை, அது எப்படி நான் பேச போனபோது கூட உங்க அம்மா முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இப்ப எப்படி கேசை வாபஸ் வாங்கினார் என்று கேட்கிறார். அதற்கு முத்து, நீ பேசின விஷயங்களை அம்மா யோசித்து பார்த்திருப்பாங்க. அதனால பிரச்சினை வேண்டாம் என்று அம்மா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி, மாமியார் அப்படிப்பட்ட கேரக்டர் கிடையாது எப்படி ஈசியாக வாங்கினாங்க என்று புலம்புகிறார்,

அடுத்ததாக சீதா இந்த சந்தோஷமான விஷயத்தை அம்மாவிடம் சொல்லி சத்யாவை கூட்டிட்டு வருகிறார். அத்துடன் முத்து மற்றும் மீனா அனைவரும் சேர்ந்து சத்யாவுக்கு அட்வைஸ் பண்ணி இனி இந்த குடும்பத்துக்கு கௌரவம் தரும்படி நீ படித்து பெரிய ஆளாக வளர்ந்து காட்டணும் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனாவின் அம்மா, முத்துவிடம் உங்க அம்மா கேசை வாபஸ் வாங்க போய் தான் எங்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்திருக்கிறது.

அதனால் அவர்களைப் பார்த்து நாங்கள் நன்றி சொல்லணும் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து, அண்ணாமலை பார்த்து பார்வதி அத்தை வீட்டுக்கு போயிட்டு அம்மாவை கூட்டிட்டு வாங்க என்று சொல்கிறார். அண்ணாமலை நான் ஒண்ணும் உங்க அம்மாவை போக சொல்லவில்லை. உங்க அம்மா தான் கிளம்பி போனாங்க, போனவங்களுக்கு வர தெரியும் என்று சொல்லி போய்விட்டார்.

இதனால் முத்து, பார்வதி அத்தை வீட்டுக்கு போய் அம்மாவை கூப்பிட்டு பார்க்கிறார். ஆனால் விஜயா வரமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிய நிலையில் முத்து ஒரு டிராமா போடுகிறார். அதாவது இப்படித்தான் கணவன் மனைவிக்குள் சின்ன பிரச்சனை வந்தது. ஆனால் போக போக அவர்கள் விவாகரத்து வாங்கும் அளவிற்கு கணவன், மனைவியை வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார் என்று ஒரு சின்ன ஸ்டோரியை சொல்லி விஜயாவை பயமுறுத்துகிறார்.

இதை கேட்டதும் விஜயாவும், அப்படி ஒரு நிலைமை எனக்கு வந்து விடுமோ. என் வீட்டுக்காரர் அப்படி எல்லாம் பண்ண மாட்டார் இருந்தாலும் நான் ஏன் இங்கு இருக்க வேண்டும் என்று பயத்தில் முத்து போட்டு டிராமா படி விஜயா வீட்டுக்கு போய் விடுகிறார். ஆனாலும் அத்தை எப்படி முத்து மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கினார் என்று தெரியாமல் ரோகிணி, தோழியிடம் புலம்புகிறார்.

அடுத்ததாக சிட்டிக்கு, சத்தியா பிரச்சனையிலிருந்து தப்பித்து விட்டார் என்ற விஷயம் தெரிய வருகிறது. உடனே கோபப்பட்ட சிட்டி, அடுத்த டார்கெட் ரோகிணி தான் என்பதற்கு ஏற்ப பணத்தை கேட்டு மிரட்ட போகிறார். ஆனால் ரோகினிடம் பணம் இல்லாததால் மறுபடியும் தில்லாலங்கடி வேலையை பார்த்து விஜயாவிடம் இருக்கும் பணத்தை திருட வாய்ப்பு இருக்கிறது. இனி எல்லா விஷயத்திலும் ரோகினி மாட்டிக்கொண்டு முழிக்கப் போகிறார். அத்துடன் முத்துவிடமும் வசமாக சிக்க போகிறார்.

- Advertisement -

Trending News