ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மீனாவை நினைத்து புலம்பும் விஜயா, ஏமாந்த மனோஜ்.. முத்துவிடம் நெருங்க முடியாமல் தோற்றுப்போன ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணி, முத்து மற்றும் மீனாவின் சந்தோசத்தை பறித்து நிம்மதி இல்லாமல் தவிக்க விட்டு, வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற பிளானில் மும்மரமாக இருக்கிறார். அந்த வகையில் முத்துவிடம் இருக்கும் ஒரு வீடியோவை எடுத்து விட்டால் நினைத்தபடி எல்லாம் நடந்து விடும் என்று திட்டம் போட்டு இருக்கிறார்.

அதன்படி முத்து மற்றும் மீனா குடித்த பாலில் தூக்கு மாத்திரையை போட்டு நல்ல தூங்க வைத்து விடுகிறார். இப்படி இவர்கள் அசந்த நேரம் பார்த்து ரோகினி யாருக்கும் தெரியாமல் நடுராத்திரியில் எழுந்து வந்து முத்துவின் போனை எடுக்க பார்க்கிறார். ஆனால் அந்த நேரத்தில் விஜயா, ரோகினி என்று கூப்பிட்டு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாய் என கேட்கிறார்.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் ரோகினி

உடனே இதை சமாளிக்கும் விதமாக எனக்கு தூக்கமே வரவில்லை. அதனால் டீ குடிக்கலாம் என்று நினைத்தேன். அதான் டீ பவுடர் எங்கே இருக்குன்னு தெரியவில்லை, மீனவை எழுப்பி கேட்கலாம் என்று போனேன் என சொல்கிறார். அதற்கு விஜயா, எனக்கும் தூக்கமே வரவில்லை. எதற்காக மீனா என்னை பார்த்து நக்கலாக சிரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் தான் எனக்கு நிம்மதி என்று சொல்கிறார்.

இதை கேட்ட ரோகிணி இதெல்லாம் ஒரு விஷயமா பாத்துக்கலாம் அத்தை நீங்க போய் தூங்குங்க என்று விஜயாவிடம் சொல்கிறார். ஆனால் விஜயா உனக்கும் தூக்கம் வரவில்லை எனக்கும் தூக்கம் வரவில்லை. நம்ம இரண்டு பேரும் வா பேசிக் கொண்டிருக்கலாம் என கூப்பிடுகிறார். உடனே ரோகிணி எனக்கு தூக்கம் வந்துவிட்டது என்று சொல்லி ரூமுக்குள் போய்விடுகிறார்.

பிறகு விஜயா போனதும் கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் முத்துவின் போனை எடுக்க வந்துவிடுகிறார். அப்பொழுது முத்துவின் போனை எடுத்த அந்த நொடியில் மனோஜ் வந்து ரோகிணியை தூக்கி சுற்றுகிறார். உடனே ரோகினி என்னாச்சு மனோஜ் ஏன் தூங்காம இந்நேரம் என்ன பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் தன் கண்ட கனவை சொல்லும் விதமாக ரோகிணியை டைவர்ட் பண்ணுகிறார்.

பிறகு மனோஜ், ரோகினி கூட்டிட்டு ரூம்குள்ளே போய்விடுகிறார். கடைசியில் ரோகினி போட்ட பிளான் முத்துவிடம் நெருங்க முடியாமல் தோற்றுப் போய்விட்டது. இதனை தொடர்ந்து விஜயா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் பொழுது மீனா சிரித்ததை நினைத்து பார்த்து சொல்லிக் கொடுப்பதில் சொதப்பி விடுகிறார். உடனே பார்வதி என்னாச்சு விஜயா, ஏன் உனக்கு பரதம் மறந்து போய்விட்டதா என்று கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை நேற்று மீனா என்னை பார்த்து நக்கலாக சிரித்தார். எதற்காக என்ன நினைச்சு இப்படி சிரித்தால் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று பார்வதியிடம் சொல்லி புலம்புகிறார். கடைசியில் விஜயாவை புலம்ப வைக்கும் அளவிற்கு மீனா ஏதோ சிரித்து காலி பண்ணி விட்டார். அடுத்ததாக மனோஜ், ஷோரூம் கடையில் இருக்கும் பொழுது பாடி பில்டராக வேலை பார்த்தவர் முத்துவிடம் அடி வாங்கிட்டு போனதால் அவருக்கு தெரிந்த நபர்களை கூட்டிட்டு கடைக்கு வருகிறார்.

வந்த நபர்கள் அனைவரும் மனோஜை மிரட்டி பணம் பறிக்க பார்க்கிறார்கள். ஆனால் மனோஜ் என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய நிலையில் வந்தவர்கள் ஒவ்வொருவரும் கடையில் இருக்கும் பொருட்களை அடாவடியாக தூக்கிட்டு போய் விடுகிறார்கள். இதனை தடுக்க முடியாமல் மனோஜ் ஏமாந்து போய் நிற்கிறார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஏமாறும் மனோஜ் கடைசியில் மொத்தமாக எல்லாத்தையும் ஏமாந்து நடுத்தெருவில் நிற்கப் போகிறார்.

இந்த ரோகிணி வேற எப்பொழுதும் முத்து மற்றும் மீனாவின் சந்தோஷத்தை கெடுக்கும் அளவிற்கு பிளான் பண்ணி வருவதால் கடையிலும் கவனம் செலுத்த முடியாமல் எல்லாத்தையும் கோட்டை விட்டு நிற்கப் போகிறார். ஆனால் ரோகிணி மாட்டக்கூடிய தருணம் கூடிய சீக்கிரத்தில் நெருங்கிவிட்டது. அந்த வகையில் கையும் கழுவுமாக முத்துவிடம் சீக்கிரம் சிக்க போகிறார்.

- Advertisement -spot_img

Trending News