செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரோகிணி திருடிய பணத்திற்கு விஜயா கொடுக்கப் போகும் தண்டனை.. முத்து வச்ச செக், அலப்பறை பண்ணும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா மீது விஜயா போட்ட பழியை சரி செய்ய வேண்டும் என்று முத்து, பார்வதி அத்தை வீட்டுக்கு போகிறார். அங்கே போனதும் எங்க அம்மாவை விட மீனா பற்றி உங்களுக்கு தான் நல்லா தெரியும். பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக குடும்பத்தையும் மீனாவையும் திருடி என்று அவமானப்படுத்துவது நல்லது இல்லை.

உங்களுக்கு மீனா மீது சந்தேகம் இருக்கிறதா என கேட்கிறார். அதற்கு பார்வதி அத்தை நான் அப்படி சொல்லவே இல்லை என்று சொல்கிறார். உடனே முத்து, உங்க பையன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் காணவில்லை என்றால் நிச்சயம் கஷ்டமாக தான் இருக்கும். அதை கண்டுபிடிக்கும் விதமாக நம் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லி அங்கிருந்து முத்து போன் பண்றேன் என சொல்கிறார்.

ஆனால் பார்வதி வேண்டாம் என்று முத்துவை தடுத்து விடுகிறார். ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் போலீஸிடம் சொன்னா நிச்சயம் விசாரணை பண்ணுவார்கள். உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் விசாரணை பண்ணுவார்கள். அப்பொழுது பணத்தை யார் திருடினார்கள் என்ற விஷயத்தையும் கண்டுபிடித்து விடலாம். மீனா மீது விழுந்த பழியையும் சரி செய்து விடலாம் என்று சொல்கிறார்.

மீனாவை நினைச்சாலே எனக்கு கஷ்டமாக இருக்கிறது, அழுதுகிட்டே இருக்கிறாள். அவளை தனியாக என்னால் விட்டுட்டு கூட வர முடியாது. என்னால் அவளை பார்க்கவே பாவமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட பார்வதி, உடனே இது என்னுடைய பணம் இல்லை, உங்க அம்மாவுடைய பணம் தான் என்று சொல்கிறார்.

அதற்கு முத்து எங்க அம்மாக்கு ஏது அவ்வளவு பணம் என்று கேட்கும் பொழுது, இதை சமாளிக்கும் விதமாக பார்வதி, பரதநாட்டியம் கிளாஸ் மூலமாக சம்பாதித்தது என்று சொல்கிறார். ஆனால் இதை நம்ப முடியவில்லை என்று முத்து சொல்லி மறுபடியும் பார்வதியிடம் கேட்ட பொழுது நீங்கள் சத்யா கேசை வாபஸ் வாங்குவதற்காக லாயருக்கு கொடுத்த அஞ்சு லட்ச ரூபா பணத்திலிருந்து உங்க அம்மாக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கிடைத்தது.

அதாவது சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கினால் இரண்டு லட்ச ரூபாய் தருகிறோம் என்று லாயர் வந்து பேசினார். உடனே உங்க அம்மாவும் அதற்கு ஒத்துக்கொண்டு பணத்தை வாங்கிட்டு கேசை வாபஸ் வாங்கினார் என சொல்கிறார். இதை கேட்டதும் முத்து, வீட்டிற்கு வந்து ஒரு சின்ன ட்ராமாவை போடுகிறார். அதாவது அந்த பணத்தை மீனாதான் திருடி இருக்கிறார்.

எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சு போச்சு என்று சொல்லிய பொழுது ரோகிணி பயப்பட ஆரம்பித்து விடுகிறார். நான் திருடிய பணத்திற்கு எதற்கு மீனா மீது முத்து பழி போடுகிறான் என்று யோசிக்க ஆரம்பித்தார். ஆனாலும் சுருதி அண்ணாமலை, மீனா மீது தேவையில்லாமல் பழி போட வேண்டாம். நடந்த உண்மை என்னவென்று சொல்லு என முத்துவிடம் கேட்ட பொழுது பார்வதி சொன்ன விஷயத்தை எல்லாமே முத்து அனைவரும் முன்னாடியும் போட்டு உடைக்கிறார்.

இதை கேட்டதும் விஜயா திருட்டு முழி முழிக்க ஆரம்பித்து விடுகிறார். பிறகு அண்ணாமலை, விஜயாவிடம் நீ செஞ்சதுக்கு மீனாவிடம் மன்னிப்பு கேளு என்று சொல்கிறார். ஆனால் மீனா, தியாகி செம்மல் மாதிரி என்னிடம் அத்தை எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டாம். இவருக்கு தெரிந்த விஷயம் எனக்கு தெரிந்தால் நான் வீட்டிற்கு வந்து யாரிடமும் சொல்லி இருக்க மாட்டேன் என்று சொல்லிய பொழுது விஜயா தியாகி மாதிரி நடிக்காத என திட்டுகிறார்.

அந்த வகையில் மீனா எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப ரொம்பவே ஓவராக அலப்பறை பண்ணுகிறார். பிறகு அண்ணாமலை, முத்து மீனா கடன்பட்ட அந்த அஞ்சு லட்ச ரூபா பணத்தையும் நீ தான் கொடுக்கணும். இப்பொழுது மீனாவுக்கு நீ ஒரு கடங்காரி என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட விஜயா அந்த பூக்காரியிடம் நான் கடன் பட்டிருக்கவா? முடியாது என்று மனோஜிடம் புலம்புகிறார்.

உடனே மனோஜ் பணத்தை எல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிய பொழுது, இல்லை நான் அவளிடம் கடனாளியாக இருக்கக் கூடாது. அதனால நீ இப்பொழுதே மலேசியாவுக்கு டிக்கெட் போடு ரோகிணி அப்பாவிடம் பணத்தை வாங்கிட்டு வரலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி, மலேசியாவுக்கா என்று அதிர்ச்சியாகிவிட்டார்.

அந்த வகையில் ரோகிணி பணத்தை திருடியதற்கு விஜயா கொடுக்கும் தண்டனையாக மலேசியா அப்பாவிடம் இருந்து அஞ்சு லட்ச ரூபாய் கொண்டு வர வேண்டும் என்று ஒரு செக் வைத்து விட்டார். திருடின பணம் 2 லட்சம் ரூபாய் என்றாலும் அதைவிட ஜாஸ்தியாக அஞ்சு லட்ச ரூபாய் விஜயாவிடம் தற்போது ரோகிணி கொடுத்தாக வேண்டும். இதற்கு இன்னும் ரோகிணி என்ன தில்லாலங்கடி வேலை பண்ண போகிறாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News