Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும், தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அது ரோகினி விஷயத்தில் நன்றாகவே பொருந்தி வருகிறது. பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றிய ரோகினிக்கு தற்போது தூக்கம் இல்லாமல் நிம்மதி இல்லாமல் தவிக்கும் ஒரு பரிதாப நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஒவ்வொரு நாளும் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தினாலேயே ரண வேதனையை அனுபவித்து வருகிறார். அந்த வகையில் சத்யாவின் வீடியோவை நாம் தான் வெளியிட்டோம் என்ற உண்மை தெரிந்த மீனா நம்மளை அடித்து துன்புறுத்துகிறார் என்று கண்ட கனவு ரோகினியை பைத்தியக்காரி மாதிரி புலம்ப வைத்து விட்டது. இதனால் நடுராத்திரியில் பயந்து போன மனோஜ், ரோகினி நிலைமை பார்த்து விஜயாவுக்கு போன் பண்ணி கூப்பிடுகிறார்.
உடனே விஜயா, மனோஜ் ரூமுக்கு போகிறார். அங்கே ரோகினியின் நிலைமையை பார்த்து விஜயா ரோகினியை சாந்தப்படுத்துகிறார். அப்பொழுது மனோஜ், தினமும் இரவு ரோகினி இப்படி தான் நடந்து கொள்கிறார் என்று விஜயாவிடம் சொல்கிறார். அந்த வகையில் பார்வதிக்கு போன் பண்ணி ஏதாவது ஒரு மந்திரவாதியை வரவைத்து ரோகினி உடம்பில் பேய் இருக்கிறதா? பார்த்து விரட்டுவோம் என்று முடிவு பண்ணி விடுகிறார்கள்.
அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு ரோகினியை கூட்டிட்டு போகிறார்கள். ரோகிணி எனக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிய நிலையிலும் விஜயா மனோஜ் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கிறார்கள். ரோகிணி பார்த்ததும் பார்வதியும் பயந்து போய் தூரமாகவே நின்னு பேசுகிறார். அந்த அளவிற்கு ரோகினி நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது.
ரோகினி எத்தனை பேரை தூக்கம் இல்லாமல் நிம்மதி இல்லாமல் தவிக்க விட்டிருப்பார். தற்பொழுது மொத்தத்திற்கும் கர்ம வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதற்கு ஏற்ப ரோகிணி சிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் பார்வதி வீட்டிற்கு மந்திரவாதி வந்து ரோகினி மீது பேய் இருப்பது போல் அடித்து விரட்ட முயற்சி எடுக்கப் போகிறார். இதுவரை பேயாட்டம் ஆடிய ரோகிணிக்கு தற்போது கிடைத்த தண்டனையாக தான் விஜயா வைத்தியம் பார்க்கிறார்.
அடுத்ததாக முத்துவுக்கு, வித்யா மூலம் ரோகிணி தான் போனை திருடி சத்யாவின் வீடியோவை சோசியல் மீடியாவில் அனுப்பியிருக்கிறார் என்ற உண்மை தெரியப்போகிறது. அதனால் ஆத்திரமடைந்த முத்து, ரோகிணி ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் விஷயத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டு உடைக்க போகிறார். அதாவது ரோகிணி பார்லரின் சொந்தக்காரர் கிடையாது. அங்கே வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரர் தான் என்பது ஏற்கனவே முத்துக்கு தெரியும்.
அந்த விஷயத்தை அண்ணாமலை இடமும் சொல்லி இருக்கிறார். ஆனால் அண்ணாமலை தான் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் விடு பார்த்துக் கொள்ளலாம் என்று முத்துவிடம் சொல்லி வைத்திருந்தார். தற்போது அதற்கெல்லாம் பொறுமையை இல்லை என்பதற்கு ஏற்ப முத்து, ரோகினி பார்லரின் சொந்தக்காரர் கிடையாது என்ற உண்மையை போட்டு உடைக்க போகிறார். அந்த வகையில் இந்த உண்மையை தெரிந்து கொண்ட விஜயா மற்றும் மனோஜ், ரோகினி மீது ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டப் போகிறார்கள். இது மட்டும் பத்தாது இனி தான் ரோகினிக்கு இருக்கிறது என்பதற்கு ஏற்ப முத்து வச்சு செய்யப் போகிறார்.