செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

முத்து கொடுத்த பணத்துக்கு விலை போன விஜயா.. மாமியார் பணத்தை திருட போகும் ரோகிணி, மீனா மீது விழும் பழி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சத்யாவை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பாமல் காப்பாற்ற வேண்டும் என்று மீனா மற்றும் முத்து முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயா, சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கி விட்டால் பிரச்சனை சரியாகிவிடும் என்று லாயர் சொன்னார். ஆனால் விஜயா கேஸ் வாபஸ் வாங்க முடியாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து லாயர் முத்துவிடம் சொன்னது, இந்த பிரச்சினையை நானே சரி பண்ணுகிறேன். ஆனால் எனக்கு அஞ்சு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று டிமான்ட் பண்ணி விட்டார். முத்துவுக்கு வேற வழி இல்லாததால் வட்டிக்கு கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொண்டார். மீதி பணத்துக்கு வீடு கட்ட வேண்டும் என்பதற்காக உண்டியலில் சேர்த்து வைத்த காசையும் எடுத்துவிட்டார்.

அத்துடன் மீனாவின் அம்மா கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணம் அண்ணாமலை கொடுத்து உதவி பண்ணி விட்டார். உடனே முத்து மற்றும் மீனா மொத்த பணத்தையும் எடுத்துட்டு லாயரிடம் கொடுத்துட்டு இந்த பிரச்சினையை எப்படியாவது சரி பண்ண வேண்டும் என்று சொல்லிப் போய்விட்டார்கள்.

உடனே லாயர், முத்துவின் அம்மா விஜயாவை தேடி பார்த்து பேசலாம் என்று பார்வதி வீட்டுக்கு போகிறார். போன இடத்தில் லாயர், விஜயாவிடம் பக்குவமாக பேசிப் பார்க்கிறார். ஆனால் விஜயா எதற்கும் சரிப்பட்டு வர மாட்டிக்கிறார் என்று தெரிந்து விட்டதால் லாயர் பணத்தை கொடுத்து லாக் பண்ணிவிடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி லாயர் உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தருகிறேன் என்று விஜயாவிடம் சொல்கிறார். உடனே விஜயா ஐம்பதாயிரம் தானா என்று யோசித்து நிலையில் பேரம் பேசி 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு நான் கேசை வாபஸ் வாங்கி விடுகிறேன் என்று விஜயா சொல்லி விடுகிறார். உடனே லாயர், முத்துக்கு ஃபோன் பண்ணி இந்த பிரச்சனை முடிந்துவிட்டது உங்க அம்மா கொடுத்த கேசை வாபஸ் வாங்க போவதாக சொல்கிறார்.

இதை கேட்டதும் முத்து சந்தோஷத்தில் வீட்டில் துள்ளி குதிக்கிறார். உடனே மனோஜ், ஏண்டா இப்படி கத்துற நாங்களே அம்மா வீட்டில் இல்லை என்று கவலையுடன் இருக்கிறோம் என்று சொல்கிறார். உடனே நானும் சந்தோஷப்படுவது அம்மாவை நினைத்து தான் என்று அம்மா சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கப் போவதாக சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி திருட்டு முழி முழித்து பதட்டம் அடைய ஆரம்பித்து விட்டார்.

பிறகு 2 லட்ச ரூபாய் பணத்துடன் வீட்டுக்கு வரும் விஜயா யாருக்கும் தெரியாமல் பணத்தை பத்திரமாக வைக்கிறார். ஆனால் இந்த விஷயம் ரோகிணிக்கு மட்டும் தெரிந்த நிலையில் சிட்டிக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் பணத்துக்கு வேற வழியில்லாததால் ரோகிணி, மாமியாரிடம் இருந்த பணத்தை ஆட்டைய போடப் போகிறார். பிறகு விஜயா அந்த பணத்தை காணும் என்று தேடும் பொழுது மீனா மீது பழி விழப் போகிறது. ஆனால் இனி ரோகிணி ஒவ்வொரு விஷயத்திலும் அல்லல்பட்டு தவிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

Trending News