Tamil Cinema News | சினிமா செய்திகள்
குருவும் சிஷ்யனும் மோதல்.. கூடவே விஜய்-யும் சேர்ந்து விட்டார்..
குருவும் சிஷ்யனும் மோதப்போகும் முதல் படம் இதுதான்
இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் அவர் படத்தில் நடிப்பதற்காக பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்கி அதன் முழு வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றது. இப்படத்தை 2019 தீபாவளி அன்று வெளிவர இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

indian2
விஜய், அட்லி இயக்கத்தில் விஜய்-63 தயாராகிக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தப்படமும் 2019 தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது. ஆகையால் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படமும் விஜய்யின் 63வது படமும் நேருக்கு நேர் மோதப்போகும் படமாகும். விஜய்-63 படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ பெயர் சூட்டலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் குருவும் சிஷ்யனும் மோதப்போகும் முதல் படம் இதுதான். இயக்குனர் சங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவர்தான் இயக்குனர் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நேருக்கு நேர் தீபாவளியன்று மோதப்போகும் படம் என்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

atlee-vijay63
இந்த இரண்டு படங்களுமே சமுதாயத்தில் நடக்கும் இந்திய அளவில் நடக்கும் அரசியலை மையமாக கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார்படத்தின் கலெக்ஷன் பல கோடிகளை தாண்டி இன்னும் வெற்றி நடை போட்டு வருகிறது.
