இயக்குனர் அட்லீ விஜய்யை வைத்து கடைசியாக மெர்சல் என்ற திரைப்படத்தை வெளியிட்டு மிகப்பெரும் சாதனை படைத்தார் இதனையடுத்து அவர் விஜய்யின் 63வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படம் மெர்சல்யும் தாண்டி அரசியல் கலந்த மாசான படமாக இருக்கும் என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சிறப்பு பூஜைகள் போடப்பட்டு படப்பிடிப்பின் நடிகர்கள் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் இதன் ஒரு பகுதியாக இயக்குனர் அட்லி அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜி.கே.விஷ்ணுவுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப் பட்டுள்ளது. இது இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

அதிகம் படித்தவை:  "விஜய்னா மாஸ் இல்லை, மாஸ் நாலே விஜய் தான்"- பிரபல இயக்குனர் கருத்து.