விஜய்-62 படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் முருகதாசுடன் கூட்டணி அமைத்துள்ளார்,முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவாதாக நடிக்க இருக்கிறார்,இதற்க்கு முன்னாடி துப்பாக்கி, கத்தி என இரண்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் முருகதாஸ்.

vijay

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார்கள்,இந்த படத்தில் கதாநாயகியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்க இருக்கிறார் ,படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்,மேலும் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் கிருஷ் கங்காதரன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

விஜய் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு “கலப்பை” என தலைப்பை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

plow

இந்த தலைப்பை பார்த்தால் விஜய் இந்த படத்தில் விவசாயம் பற்றி பிரச்னையை பேச போகிறார் என தெரிகிறது.

சமீபத்தில் கூட ஒரு இணைய ஊடக விருது விழாவில் விவாசாயிகள் பிரச்னை குறித்து விஜய் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனால் இந்த தலைப்பை பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை.