Tamil Cinema News | சினிமா செய்திகள்
காட்டுத்தீயாய் பரவும் விஜய் தம் அடிக்கும் வைரல் வீடியோ.
தளபதி விஜய் நடிக்க இருக்கும் படம் விஜய்62 இந்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார்,கத்தி ,துப்பாக்கி என பெரும் வெற்றியை கொடுத்தவர் முருகதாஸ் என அனைவருக்கும் தெரியும்.
தளபதி 62 படத்தின் பட பிடிப்பு இந்த மாதம் கடைசியில் அல்லது அடுத்த மாதம் முதலில் துவங்கும் என அறிவித்துள்ளார்கள்.இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் சன் குடும்பம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. எந்திரனுக்கு பிறகு மிகப்பெரிய ரிலீஸ் என்றால் தளபதி62 தான் என கூறியுள்ளார் கலாநிதிமாறன்.
விஜய்62 அதிகாரபூர்வ அறிவிப்பு:
இந்தபடத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான் இதற்க்கு முன் மெர்சல் படத்திற்கும் இவர்தான் இசையமைத்தார் என அனைவருக்கும் தெரியும். மேலும் ஒரு அதுகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் படக்குழு. ஆம் தற்பொழுது படத்தின் நடிகையை அறிவித்துள்ளார்.
கேமரா மேன் கிரீஸ் கங்காதரன் எனவும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எனவும் பதிவிட்டுள்ளார்கள்.
விஜய் 62 படத்தின் போட்டோ சூட்:
தற்பொழுது விஜய் 62 படத்தின் போட்டோ சூட் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது அதில் விஜய் தம் அடிக்கும் காட்ச்சிகள் இடம்பெற்றுள்ளது
தளபதியும் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் என இந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்.
சினிமாபேட்டை கமென்ட்ஸ்: தம் அடிப்பது உடல்நலத்திற்கு கேடு.
