கத்தி மற்றும் துப்பாக்கி என இரண்டு பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் முருகதாஸ் தற்பொழுது விஜய் மீண்டும்  முருகதாஸ் இயக்கத்தில் 3வது முறையாக இணைகின்றார்.

Kaththi-3

இதனை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் சன் பிக்சர்ஸ். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆர்ட் டிரைக்டராக சந்தானம் ,ஒளிப்பதிவாளாராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ரொம்ப மகிழ்ச்சியில் உள்ளார். எப்பொழுது ரஹ்மான் இசையமைப்பாளர் என அறிவித்தார்களோ அந்த நிமிடத்தில் இருந்து தான் விஜய் ரசிகர்கள் ஜர்க் ஆனார்கள்.

காரணம் மெர்சல் படத்திற்கு அவர் தூக்கி போட்ட டியுனை எதுவும் பேசாமல் ஏற்றுக் கொண்டு படத்தில் சேர்த்தார் அட்லி. பின்னனி இசை கூட ரஹ்மான் உதவியாளர்கள் புகுந்து விளையாடி பிராக்டீஸ் பண்ணிவிட்டதாக குற்றசாட்டு எழுந்தது.

ரஹ்மான் சரக்கு வேற ஸ்டைலில் போய்கொண்டு இருக்கிறது. ஆனால் கடைசி ஐந்து வருடத்தில் விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தியது இல்லாமல் அஜித் ரசிகர்களையும் வெகுவாக திருப்தி படுத்திய ஒரே படம் “கத்தி” படத்தின் ஆல்பம் தான், இதை எப்பொழுது கேட்டாலும் சலிக்காது.

பாடலும் சரி பின்னனி இசையும் சரி இந்த படம் விஜய் சினிமா வாழ்க்கையில் மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் விஐய் முருதாஸ் கூட்டணிக்கு கண்டிப்பா அனிருத்தான் இசையமைப்பாளர் என்று இன்ப வெள்ளத்தில் இருந்தவர்களை நீளி கண்ணீர் வடிக்கவிட்டது இந்த அறிவிப்பு.

மெர்சல் படத்தின் இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடலை ரசித்தவர்களை விட வெளியே சொல்ல முடியாமல் தவித்தவர்கள் தான் அதிகம். ரஹ்மான் ஒரு Brand value தான் அவர் ஸ்டைலில் படம் எடுத்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பதே நிதர்சண உண்மை. அதுவும் A Center மக்களை மட்டும் கவரும்படி போட்டு வருகிறார்..