Connect with us

Cinemapettai

விஜய் 62வின் தலைப்பு இதுதானா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் 62வின் தலைப்பு இதுதானா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் – இயக்குநர் முருகதாஸ் இணைந்துள்ள மூன்றாவது படமான விஜய்62 படத்தின் ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படத்தின் பெயர் துப்பாக்கி. ராணுவ அதிகாரியாக விஜய் நடத்த அந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இதையடுத்து, இந்த ஜோடி இணைந்த படத்துக்கு கத்தி என தலைப்பு வைத்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சமந்தா நடித்திருந்த அந்த படமும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க, இந்த காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளது. சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இன்றைய சூழலை மையப்படுத்திய அரசியல் சரவெடியாக விஜய்62 படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்னையை அந்த படம் பேசும் என்கிறார்கள் படக்குழுவினர். இந்த படத்துக்காக மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடப்பதுபோல் ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதேபோல், குண்டுவெடிப்பு காட்சி ஒன்றையும் படக்குழுவினர் நள்ளிரவில் ஷூட் செய்து முடித்துள்ளனர். அதில், அரசியல்வாதி ஒருவர் உயிரிழப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

அந்த படத்தில் அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடித்திருக்கிறார்கள். கெட்டது செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். இந்தநிலையில், படத்தின் பெயரை படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 2 படங்களைப் போலவே இந்த படத்துக்கும் ஆயுதம் ஒன்றின் பெயரையே தலைப்பாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த லிஸ்டில் கோடரி என்ற பெயர் முந்துவதாகச் சொல்லப்படுகிறது. விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top