துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கி படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு படத்தில் இவர் நடிப்பைப் பார்த்து வியந்த முருகதாஸ், இந்த படத்துக்கும் இவரையே புக் செய்துவிட்டாராம்.