‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யின் 61 வது படத்தில் அவருடன் இயக்குனர் அட்லி இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள உத்தாண்டியில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. பட அதிபரான ஆதித்யா ராம், ஈ.சி. ஆர் ரோட்டில் ஆரம்பித்த இந்த ஸ்டுடியோவில் தான் தசாவதாரம் , ஆயிரத்தில் ஒருவன், புலி உள்பட பல படங்களின் படப்பிடிப்பு நடந்தது.

தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பும் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.