இளையதளபதி விஜய் நடித்து வந்த ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 61’ படம் குறித்து பல்வேறு செய்திகள் அதிகாரபூர்வமற்ற வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது
அவற்றில் ஒன்று இந்த படத்தின் திரைக்கதை எழுதி வரும் பிரபல இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், இந்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து அதை விஜய் படிப்பதற்காக கொடுக்கப்பட்டது என்பதுதான். அதை விஜய் படித்து பிடித்து விட்டதாகவும் மேலும் ஒரு சில இடங்களில் மாற்ற சொன்னார் என்று செய்திகள் வெளிவந்தது..
ஆனால் படக்குழுவினர்களுக்கு நெருங்கிய வட்டாரம் இந்த செய்தியை மறுத்துள்ளது. விஜயேந்திரபிரசாத் தற்போது இந்த படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும், இன்னும் 20 நாட்களில் அவர் இந்த பணியை முடித்துவிடுவார் என்றும் கூறி இதுவரை வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.