விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரண்டு, மூன்று வேடங்களில் நடித்து வருவதாகவும், அவற்றில் ஒரு வேடத்தில் நடிக்க 10 கிலோ எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா தல அஜித் - முழு விவரம்

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் விஜய்க்கு ஒரே வேடம்தான் என்றும் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் விஜய் நடிக்கின்றார் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  விஜய் சாருக்கு மெர்சலில் அந்த டைலாக் நான் தான் சொல்லிக்கொடுத்தேன்.!உண்மையை சொன்ன பிரபல காமெடியன்.!

ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு ஒரே வேடமாக இருந்தாலும் இரண்டு அல்லது மூன்றுவித கெட்டப்புகளில் அவர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.