vijay60இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தும் இன்னும் பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது.

அதிகம் படித்தவை:  சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை அதிரடியாக அறிவித்த சன் பிக்சர் நிறுவனம்.!

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் மே 2ஆம் தேதி முதல் ‘விஜய் 60’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ட்விட்டரை மிரளவைத்த தளபதி விஜய்.. பல அவமானங்களில் சாதனை..

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாடல் காட்சி ஒன்று சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இதற்கான செட் பின்னி மில்லில் தயாராகி வருவதாகவும் டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது. இங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவதுள்ளது.