theri-vijay60இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதியாகிவிட்ட நிலையில், இந்த படத்தின் ரிலீஸூக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தை வரவேற்க இப்போதே விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் அதே ஏப்ரல் 14ஆம் தேதியில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் கொடுக்க தயாராகிவிட்டார். அதாவது ‘விஜய் 60’ படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் அதே நாளில்தான் என்பது தற்போது முடிவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் தான் ஃபர்ஸ்ட். சூர்யாவை பின்னுக்கு தள்ளிய பவன் கல்யான் பட டீஸர் !

முன்னதாக ஏப்ரல் 11-ல் ‘விஜய் 60’ படம் ஆரம்பமாகும் என்று கூறிய நிலையில் தற்போது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என விஜய் கூற அதை இயக்குனர் பரதனும் ஒப்புக்கொண்டார். எனவே ‘தெறி’ ரிலீஸும் ‘விஜய் 60’ படத்தொடக்கவிழாவும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது.