Connect with us

Cinemapettai

தளபதி விஜய்யை வியக்க வைத்த ஹிப்ஹாப் ஆதி.. அப்படி என்ன செய்தார்?

aadhi-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யை வியக்க வைத்த ஹிப்ஹாப் ஆதி.. அப்படி என்ன செய்தார்?

தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக இவரது படங்கள் தமிழ் சினிமாவை வசூல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வருகிறது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் நவீனகால டி. ராஜேந்தர் என எல்லோராலும் அழைக்கப்படுபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த மீசையமுறுக்கு மற்றும் நட்பேதுணை ஆகிய படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

ஆதி தற்போது நான் சிரித்தால் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் காதலர் தின சிறப்பாக வெளிவர உள்ளது. நான் சிரித்தால் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நான் சிரித்தால் பட ட்ரெய்லர் தளபதி விஜய்யை மிகவும் ஈர்த்தகாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தளபதி கூறியதாவது, சமீபத்தில் தான் பார்த்து மிகவும் சந்தோசமாக என்ஜாய் பண்ணி பார்த்த ட்ரெய்லர் நான் சிரித்தால் என்றும், படக்குழுவினருக்கு படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் விஜய்யின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது. மேலும் இந்த படத்தை அவ்னி பிக்சர்ஸ் மூலம் சுந்தர் .சி தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top