Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன நண்பா, பட்டையை கிளப்பி இருக்கீங்க.. சூரரைப் போற்று பார்த்துவிட்டு சூர்யாவுக்கு போன் பண்ணிய விஜய்?
அமேசான் தளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான சூரரைப்போற்று படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் இருந்து இந்திய சினிமா வரை உள்ள அனைத்து நட்சத்திரங்களும் சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு ஆகா ஓகோ என பாராட்ட தள்ளி வருகின்றனர்.
சூர்யாவின் கடந்த சில வருடங்களில் வெளியான படங்களிலேயே சூரரைப்போற்று படம்தான் தரமாக இருக்கிறது என சூர்யாவின் ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர்.
இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு சூர்யாவுக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவித்ததாக தற்போது ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.
படம் செமையாக இருக்கிறது என சூர்யாவை பாராட்டித் தள்ளி விட்டாராம் விஜய். தற்போதைக்கு கோலிவுட்டில் மிக மிக சூடான செய்தி என்றால் இதுதான்.
ஆனால் உண்மையில் விஜய் சூர்யாவிடம் போன் பேசினாரா என்பது சூர்யா மற்றும் விஜய் ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும். வழக்கம்போல் ரசிகர்கள் செய்த மாய வேலையா என்பதும் தெரியவில்லை.

soorarai-pottru-cinemapettai
பெரும்பாலும் சூரரைப்போற்று பார்த்துவிட்டு விஜய் போன் பண்ணி வாழ்த்துக் கூறி இருப்பார் என்பது போன்ற தகவல்களே பெரும்பாலும் வெளி வருகின்றன. அடிப்படையில் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
