Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் செல்பியை மிஞ்சும் விஜய் சேதுபதி புகைப்படம்.. அன்பு முத்தத்தால் மிரள போகும் தமிழ் சினிமா
தமிழ்சினிமாவில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்து அதையெல்லாம் முறியடித்து பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெறும் திரைப்படங்கள் என்றால் அது தளபதி விஜய்யின் படம்தான். அந்த அளவுக்கு அரசியல் ரீதியாக பல பிரச்சினைகளை இன்றும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சமீபத்தில் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமானவரித்துறையினர் விஜய்யை அழைத்து வந்தது, கட்சிக்காரர்கள் படப்பிடிப்புக்கு முன்பே போராட்டம் நடத்தியது போன்றவை விஜய் மீதான கவனத்தை இந்திய லெவலில் கொண்டு போய் விட்டது.
விஜய்க்கு ஆதரவாக லட்சக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலியில் திரண்டு நடிகர் விஜய்க்கு சப்போர்ட் செய்தது முன்னணி நடிகர்களை மட்டும் அல்லாமல் அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல தனது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையதளத்தில் உலகம் முழுவதும் செம்ம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு தளபதி விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று உள்ளதாக படக்குழு சார்பில் செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் படக்குழுவில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது விஜய் சேதுபதி அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும், தளபதி விஜய் ஆசையாக விஜய் சேதுபதியிடம் தனக்கு ஒரு முத்தம் தருமாறு கேட்டு வாங்கியதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ஒருவேளை அந்த புகைப்படம் மட்டும் வெளியானால் பெரிய நடிகர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமை இருப்பதை கண்டு இந்திய சினிமா உலகமே பொறாமைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் தளபதி விஜய்யின் செல்பி புகைப்படத்தை விட பலமடங்கு சாதனை படைக்கும் எனவும் தெரிகிறது.
அன்பு முத்தத்தால் ஒன்று சேர்ந்த இரண்டு நல்ல உள்ளங்கள். ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
