nithya

மெர்சல் இதில் விஜய், எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம்.

தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான்.

mersal

விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3 விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டியுள்ளார்.

அதிகம் படித்தவை:  வரும் 14 ந் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம்? விஜய் 60வது படத்தால் வந்த சோதனை

மெர்சல் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 200 கோடிக்கு மேல் உலகம் முழுவது வசூல் செய்து சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.

mersal

மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று பேர் மூன்று விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

மற்ற இருவருக்கும் அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை எனினும் 80களில் வரும் நித்யா மேனனின் கதாபாத்திரம் பலத்த கைதட்டலுடன் மக்களின் மனதில் பதியும் வண்ணம் இருந்தது.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு
mersal

நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் விஜய் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,விஜய் படப்பிடிப்பு தளத்தில் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார்.

அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். மிகவும் அமைதியாக தன் வேலைகளை செய்துகொண்டிருப்பார்.எனக் கூறினார் நித்யா மேனன்.