Tamil Cinema News | சினிமா செய்திகள்
மனைவியிடம் திட்டு வாங்குவதில் விஜய்யும் நம்மள மாதிரிதான் போல.. இந்த விஷயத்திற்காக அடி மட்டும் தான் விழுகல
ஊருக்கே பருப்பு ஆனாலும் வீட்டுக்கு அடிமை தான் என்ற பழமொழி தளபதி விஜய்யின் வாழ்க்கையில் அப்படியே நடந்துள்ளது. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் தன்னுடைய மனைவியிடம் அடங்கி போகாவிட்டால் ஆபத்துதான் என்பது தளபதி விஜய்க்கு நடந்துள்ளதை பிரபல நடிகர் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் அந்தத் திருமணம் நடைபெற்றது. அதில் நடிகர் சாந்தனுவுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தவர் தளபதி விஜய்.
சாந்தனு தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் தளபதி விஜய் அதை செய்தார். திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்ற தளபதி தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சங்கீதாவிடம் சாந்தனுவுக்கு தாலி எடுத்து கொடுத்த விஷயத்தை உளறியுள்ளார்.
அதனைக் கேட்ட சங்கீதா, தாலி எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் பெரிய ஆள் ஆகி விட்டீர்களா எனவும், பெரிய பெரிய காரியங்களில் மூத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் விஜய்யை செம வாங்கு வாங்கினாராம்.
இதனை தளபதி விஜய் சாந்தனுவை பார்க்கும்போதெல்லாம் கூறி புலம்புவதாக சாந்தனு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தளபதி விஜய்யும் சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
