அம்மா பாசத்தில் லாரன்ஸை மிஞ்சிய தளபதி விஜய்.. எட்டு கிரவுண்டில் என்ன கட்டிக் கொடுத்தார் பாருங்க!

Vijay builds sai baba temple: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் இவருடைய அடுத்த படத்திற்கான இயக்குனரை லாக் செய்யும் முயற்சியில் இருந்து வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் நடிகராக பரபரப்பாக இருந்து வரும் இவர் இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதில் வெற்றி கொடியை நட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார்.

இப்படி பிசியாக இருக்கும் வேலையில் சமீபத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு விஜய் சென்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் கிறிஸ்துவர் மதத்தை சேர்ந்திருந்தாலும் அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தான். ஆனால் இப்பொழுது எதற்காக சாய்பாபா கோவிலுக்கு சென்று இருக்கிறார் என்ற ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாயிருக்கிறது.

சாய்பாபா கோயிலை கொரட்டூரில் கட்டிய விஜய்

vijay saibaba
vijay saibaba

அதாவது விஜய்யின் அம்மாவுக்கு சாய்பாபா மீது அதீத நம்பிக்கை உண்டு. அந்த வகையில் அம்மா மீது இருக்கும் பாசத்தால் சென்னையில் உள்ள அம்பத்தூர் நகராட்சியை சேர்ந்த கொரட்டூரில் சாய்பாபா கோவிலை கட்டி கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேகத்தை கோலாகலமாக நடத்திருக்கிறார்.

அதில் விஜய், புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய்யின் அம்மா சோபனா ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார்கள்.

அதற்கான புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்க்கு சொந்தமான உதயம் தியேட்டர் அருகில் இருக்கும் இடத்தில் தான் சாய்பாபா கோயில் அமைப்பதாக திட்டமிடப்பட்டது.

ஆனால் அங்கு மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பொழுது கொரட்டூரில் இருக்கும் இடத்தில் சுமார் 8 கிரவுண்டில் நிலப்பரப்பில் சாய்பாபா கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

சாய்பாபா கோவிலில் தரிசனம் பண்ணிய விஜய்

vijay

இதே மாதிரி நடிகர் லாரன்ஸ் தான் அம்மாவின் பாசத்திற்காக எந்த விஷயத்தையும் செய்ய தயங்க மாட்டார். தற்போது லாரன்ஸை மிஞ்சும் அளவிற்கு விஜய் இவருடைய அம்மாவிற்காக சாய்பாபா கோயிலைக் கட்டிக் கொடுத்திருக்கிறது ஆச்சரியப்பட வைக்கிறது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -