பிரசாந்த் படத்தை தவறவிட்ட விஜய்.. தளபதி நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்து தான் விஜய் இந்த உயரத்தை அடைந்து உள்ளார். ஆனாலும் சில சூப்பர் ஹிட் பட வாய்ப்பை விஜய் தவற விட்டுள்ளார். அதில் பிரசாந்தின் ஹிட் படமும் ஒன்று அடங்கும். அப்போது பிரசாந்த் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

அந்த வகையில் 1999 இல் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து வெளியான ஜோடி படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் விஜய் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். இதனால் அப்போது விஜயின் கால்ஷீட் கிடைக்காததால் இப்படத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பிரசாந்துக்கு ஜோடியாக இப்படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். 90களில் தமிழ் சினிமாவை கலக்கிய ஜோடி என்றால் அது விஜய், சிம்ரன் தான். ஒன்ஸ்மோர் படத்தில் துவங்கி துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே மற்றும் உதயா போன்ற படங்களில் விஜய், சிம்ரன் இருவரும் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.

நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் நடித்திருந்தாலும் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் யூத் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் ஜோடி படம் வெற்றி பெற்றாலும் விஜயுடன் சிம்ரன் படத்தில் நடித்திருந்தால் படம் வேற லெவல் ஹிட்டாகி இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் ஜோடி படத்தில் முதலாவதாக விஜய் தான் நடிக்க இருந்தார் என்ற தகவலை கூறியுள்ளார். ஆனாலும் அப்போது ஹிட் படத்தை தவற விட்டாலும் தற்போது மாஸ் ஹீரோவாக விஜய் வலம் வருகிறார்.

Next Story

- Advertisement -