புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முன்னாள் முதல்வரை அட்ட Copy அடித்த விஜய்.. அவரும் நீங்களும் ஒன்னா? வருத்தெடுக்கும் பிரபலங்கள்

விஜய் பிரபல அரசியல் கட்சித் தலைவரை அப்படியே காப்பி அடிப்பதாக தகவல் வெளியாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்துள்ளது. எப்போதுமே தேர்தல் நேரத்தின்போதுதான் இப்படி பரபரப்பாக இருக்கும். அரசியல்வாதிகளிடம் இருந்து அது, மக்களுக்கும் தொற்றும். ஆனால் இப்போது ஏன் இப்படியிருக்கிறது என்றால், அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

வழக்கம் போல திராவிட கட்சிகள் முன் தவெக எடுபடாது என்று கூறினால், அது விஜயின் முயற்சியை குறைத்துமதிப்பிடுவதாக அமையும் என்றுகூட விமர்சனம் வரும். ஏனென்றால் எதையும் சொல்வது எளிது, செய்வது கடினம். பல கோடிகள் செலவழிக்கும் புதிய துறையில் காலெடுத்து வைத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளை விளாசியெடுத்து, மற்றவர்களை எல்லாம் புரட்டி எடுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் புலம்பவிட்டது விஜய்யின் சாமர்த்தியம்.

ஆனால், அவரது கட்சியில் இன்னும் எத்தனை முதிர்ச்சியானவர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரியவில்லை. ஏனெனில் அவரது கொள்கைகளை அவரது கட்சியினரே கூட பின்பற்ற காலமெடுக்கும் என்ற நிலையில், வரும் 2026 தேர்தலில் விஜய் முதல்வர் ஆக வேண்டும் என உறுதியெடுத்திருக்கிறார். அவருக்கு உதவ லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் உள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டியை காபி பண்ணும் விஜய்

ஆனால், தனது செயல்பாடுகளை இன்னும் நிரூபிக்காமல் விஜய் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியைப் போன்றே அதே வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட்டும் அணிந்துகொண்டு அக்கட்சியின் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் நடந்த மாநாட்டிலும் பங்கேற்றதாக விமர்சனம் குவிந்து வருகிறது.

இது சினிமா பட ரீமேக் அல்ல. அதே காட்சிகளை, வசனங்களை அப்படியே வைப்பதற்கு, அவர்களின் உடையைப் போன்றே தானும் போட்டு, அரசியலில் தலைவர் என்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொண்டு வருவதற்கு? இப்படிச் செய்ததால்தான் கமல் அரசியலுக்கு வந்து தோற்றார். ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவேயில்லை.

அரசியலின் அடிப்படையை விஜய் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. அதாவது, அவருக்கு ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி என்பவரை வைத்திருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், விஜய் முன்னோடியாக வடித்திருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் உலாவும் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி திடீரென்று முதல்வராகவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, ‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004 ஆம் ஆண்டு ஆந்திரா முழுவதும் 1400 கிமீ., நடைப்பயணம் செய்து, அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதிகளைப் கைப்பற்றி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்து முதல்வரானார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அதன்பின், டெல்லி காங்கிரஸ் தலைமைக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கருத்துப் போரும் கருத்து வேறுபாடும் எழவே, ஆறுதல் பயணம் என்ற யாத்திரையை தொடங்கவிருப்பதாக கூறினார். காங்., தடை விதிக்க, அதை மீறினார். சொன்னபடி, தன் பாத யாத்திரையை அவர் ஜூலை 2010 ஆம் ஆண்டு தொடங்க, நவம்பரில் காங்கிரஸில் இருந்து விலகினார்.

அதன்பின், தன் சொந்த ஊரான புலிவெந்துலாவின் தன் தந்தையின் நினைவாக அவரது பெயரிலேயே ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்குவதாக அறிவித்து, செயலில் இறங்கி, முதலில் 2004 -லும், 2009 -லும் அவரது தந்தையை வெற்றி பெறக் காரணமாக இருந்த 1,470 கிமீ., பாதயாத்திரையை போன்றே இவரின் யாத்திரையும் கருதப்பட்டது.

அதன்பின் ஆளுங்கட்சியால் பல்வேறு தொந்தரவுகள் ரெய்டுகள், தோல்விகள் இதெல்லாமும் பார்த்த பின், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனால், மக்களின் அதிருப்தி நிலவியதால் 2024 ல் அவருக்கு ஓட்டுப்போட்ட அதே கையால் வீட்டுக்கு அனுப்பினர்.’

tvk-jagan
tvk-jagan

ஒரு நல்ல தலைவர் யார்?

எனவே ஒரு வலுவான தலைவர் எங்கிருந்து வந்தாலும் அவர் என்னென்ன செய்யப் போகிறார்? என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்? தொண்டர்களையும் மக்களையும் எவ்வாறு வழி நடத்துகிறார்? எப்படி தன் போட்டி அரசியல் தலைவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறார்? என்பதில் இருந்துதான் மக்கள் அவரை கூர்ந்து கவனித்து ஓட்டுப்போட்டு ஆட்சிக் கட்டிலில் உட்கார வைப்பரே தவிர வெறும் வாய் ஜாலத்தினாலும் அல்ல, போடும் உடைகளினாலும் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News