ஓட்டு போடும்போது மயிரிழையில் தப்பித்த விஜய்.. ரஜினிக்கு செய்தது போல் தளபதிக்கு வைத்த பொறி

Vijay: நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்து விட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 72% வரை வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடந்திருக்கிறது.

அந்த வகையில் ஒவ்வொரு குடிமகன்களும் அவர்களுடைய கடமையை நிறைவேற்றும் விதமாக வாக்களித்துவிட்டு வந்தார்கள். அதே மாதிரி சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாக்குகளை போட்டு ஜனநாயக
கடமையை நிறைவேற்றி விட்டார்கள்.

அதே மாதிரி விஜய் இந்த முறை எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் சைலண்டாக ஓட்டு போட வந்தார். ஆனால் வரும்பொழுது மீடியாக்கள் இவரை சுற்றி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் 10- 12 கேமராக்களை வைத்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்தது மட்டும் இல்லாமல் ஓட்டு போடும் அரைக்குள்ளையே போய்விட்டார்கள்.

கிரேட் எஸ்கேப் ஆன தளபதி

பொதுவாக மீடியாக்கள் உள்ளே போகிறதுக்கு அனுமதி கிடையாது. ஆனால் விஜய்க்கு மட்டும் ரூல்ஸ் மீறி மீடியாக்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். அத்துடன் விஜய் ஓட்டு போடும் போது யாருக்கு ஓட்டு போடுகிறார் என்பதை எடுத்து விட வேண்டும் என்று கேமராவை டாப் ஆங்கிள் வைத்து எடுக்க முயற்சி பண்ணி இருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் போலீஸ் வந்து இவர்களை விரட்டி வெளியே அனுப்பி விட்டார்கள். இல்லை என்றால் ஓட்டு போடும் போது விஜய் யாருக்கு போட்டார் என்பது லீக் ஆயிருக்கும். அந்த வகையில் மயிரிழையில் இந்த விஷயத்தில் இருந்து விஜய் தப்பித்து விட்டார்.

இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை ரஜினிக்கும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதே மாதிரி விஜய்யையும் இந்த ஒரு விஷயத்தில் சிக்க வைத்து விடலாம் என்று பொறி வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசியில் தளபதி உஷார் ஆகி விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்