Tamil Cinema News | சினிமா செய்திகள்
படத்துக்கு படம் விக் வைத்து ஏமாற்றும் தளபதி விஜய்.. வசமாக சிக்கிய புகைப்படங்கள்
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் ஹைதராபாத்தில் இருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் தளபதி விஜய் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். .
தளபதி 66 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் கருப்புச் சட்டை அணிந்து மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிந்து வலம் வந்தார். ஆனால் அவரது ஹேர் ஸ்டைல் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டது.
தளபதி விஜய் சமீபகாலமாக அவரது தலையில் விக் வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், தற்போது அது உண்மையாகிவிட்டது. ஏனென்றால் ஒவ்வொரு நாள் தளபதி விஜயின் புகைப்படங்கள் வரும் போதும், அவரது தலைமுடி ஒவ்வொரு விதமாக உள்ளது. இதனிடையே தளபதி விஜய் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி 66 திரைப்படத்தில் இணைவதை அடுத்து, விஜய்யுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மீண்டும் தளபதியோட இணைவதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் தளபதி விஜய்யின் தலை முடி சற்று மோசமாக இருந்தது. அதே போல பீஸ்ட் படத்திற்காக தளபதி விஜய் இயக்குனர் நெல்சனுடன் நேர்காணல் பேட்டி ஒன்றில் ஈடுபட்டார்.
அதில் தலையை அசைக்காமல் தளபதி விஜய் பேசியிருப்பார். அப்போது அவர் தலையில் விக் வைத்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். மேலும் சமீபத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த போது, தளபதி விஜய்யின் ஹேர் ஸ்டைல் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனிடையே தளபதி விஜயின் உண்மையான ஹேர்ஸ்டைல் எது என ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.

vijay
இந்நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக விக் வைப்பது என்பது சாதாரணமானது. ஆனால் பொது இடங்களில் கூட தளபதி விஜய் தலையில் விக் வைத்து வருகிறார் என்றால், அவருக்கு தலையில் முடி இருக்கிறதா, இல்லையா என்ற அளவுக்கு கேள்வி கேட்டு அவரது புகைப்படங்களை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

vijay
