Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷாஜகான் படத்தில் முதலில் விஜய் இல்லையாம்.. அந்த ஹீரோவை போடறதுக்கு பேசாமல் சும்மா இருக்கலாம்!
2001 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் கேஎஸ் ரவி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சராசரியான வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஷாஜகான்.
இதில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் உண்மை காதல் என்றால் சொல் உயிரையும் கொடுக்கிறேன் என்ற வசனம் தான் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் உருவாகியிருந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி இந்த படத்தை தயாரித்திருந்தார். முதல் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஷாம் தான்.
சமீபத்தில் சூதாட்ட வழக்கில் மாட்டி கைதான அதே ஷாம் தான். அன்றைய காலகட்டத்தில் ஷாம் ஒரு காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார்.
கடைசியில் ஆர்பி சவுத்ரி இந்த கதையை விஜய்யிடம் கூறி அவரின் சம்மதத்தை பெற்று உருவாக்கி விட்டாராம்.
