Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோவ்! இந்த பிரச்சனையெல்லாம் வரும், சமாளிச்சுருவீங்களா.. ஏ ஆர் முருகதாஸை எச்சரித்த விஜய்!
ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. அதில் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது.
ஆனால் கடைசியாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த சர்கார் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் ரசிகர்களுக்கு அவ்வளவாக அந்த படம் திருப்தியாக அமையவில்லை.
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தளபதி விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் படங்கள் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது உண்மைதான்.
இந்நிலையில் நான்காவது முறையாக தளபதி65 படத்தில் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி வைத்துள்ளது. மறுபடியும் முதலில் இருந்தா என ரசிகர்கள் சோகத்துடன் காணப்படுகின்றனர்.
இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் முருகதாஸ் விஜய் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் வேண்டாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. விஜய் புதிய இயக்குனர்களுடன் நடித்தால் இன்னும் அவரது மார்க்கெட் நன்றாக இருக்குமே எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் முருகதாஸ் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த சர்கார் படத்தின் போது அரசியல் பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் என படம் வெளியாவதற்கு முன்னரே எச்சரித்துள்ளாராம் தளபதி விஜய்.
உங்களால் அந்த பிரச்சனைகளை சமாளித்து கொள்ள முடியுமா எனவும் கேட்டுள்ளார். எல்லாம் ஓகே சொன்ன பிறகுதான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தளபதி விஜய். இந்த முறை விஜய் முருகதாஸ் கூட்டணியில் அரசியல் இருக்காது என்பது உறுதி.
சர்கார் படம் கண்ணு முன்னாடி வந்து போகுமா, இல்லையா!
