Illayathalapathy-Vijay-6இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருநெல்வேலியில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் 4 வில்லன்கள் மோதவுள்ளார்கள். ஏற்கனவே வந்த தகவலின்படி ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி இப்படத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் வந்த தகவலின்படி ஹரிஸ் உத்தமன், சரத் லோகித்ஸவா ஆகியோரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்களாம்.