vijay-60இளையதளபதி விஜய் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக உழைப்பேன் என்று அறிவித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் அவருக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டதால், அவர் இம்முறை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில் விஜய் தலைமை ரசிகர் மன்ற தலைவர் இந்த தேர்தலில் விஜய்யின் நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்த தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு இட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய் தற்போது சென்னையில் ‘விஜய் 60’ படப்பிடிப்பில் இருப்பதாகவும் இம்முறையும் அவர் தவறாது வாக்களிப்பார் என்றும் கூறப்படுகிறது.