Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-vetri-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை வைத்து தேசிய பிரச்சினையை கையில் எடுக்கும் வெற்றிமாறன்.. போடு, கொல மாஸ்!

இன்று வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய விஷயங்களும் வெளியில் வரத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் அடுத்ததாக விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை என்ற படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார் வெற்றிமாறன். அதேநேரத்தில் ராஜன் வகையறா என்ற வட சென்னை படத்தில் வெப்சீரிஸ் பணிகளும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் இடைவேளை இல்லாமல் தொடர உள்ளது. மேலும் ஏற்கனவே ஒரு வீடியோவில் தனக்கு இருக்கும் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு விஜய்க்காக வெயிட் செய்யப் போகிறேன் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

அது எந்த மாதிரியான படம் என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்தது விஜய் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முக்கியமான தேசிய பிரச்சினையை கையில் எடுத்து விளையாட இருக்கிறார்கள்.

விஜய் படங்களில் சமீபகாலமாக சமூக கருத்துக்கள் ஆழமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக உள்ளதாம்.

விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் விவசாய பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளதாம். ஏற்கனவே விஜய் படங்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு படம் வந்து விட்டால் அவ்வளவு தான்.

vijay-vetrimaran-cinemapettai

vijay-vetrimaran-cinemapettai

Continue Reading
To Top