Connect with us

Cinemapettai

விஜய் வசந்தின் திகில் கலாட்டா- மை டியர் லிசா மோஷன் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் வசந்தின் திகில் கலாட்டா- மை டியர் லிசா மோஷன் போஸ்டர் வெளியானது

சுமார் 30 வருடங்கள் கழித்து மீண்டும் வரும் ‘மை டியர் லிசா’ என்ற பெயரில் மீண்டும் படம் வெளியாகிறது. 1987ஆம் ஆண்டு வெளியான பேய் படம் மை டியர் லிசா. இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பேய்ப் படங்களின் உச்சம் லிசா.

இந்த புதிய வெர்ஷனில் விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார்,  ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்குகிறார். ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஔிப்பதிவு-சாஜன் PJ. இசை-DM.உதயகுமார்,பின்னணி இசை- ஹரிஷ்சுரேந்தர். எடிட்டிங் – கார்த்திக் ராம்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு பொங்கல் விருந்தாக நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top