fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்திற்கு வந்த சிக்கல்.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கதைதான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்திற்கு வந்த சிக்கல்.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கதைதான்!

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க எப்போது விஜய் சேதுபதி முடிவு செய்தாரோ அப்போது இருந்தே அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க மாட்டார் என நம்பிக்கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சமீபத்தில் 800 படம் மோஷன் போஸ்டர் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் கொஞ்சம் குழப்பத்தில் உள்ளார் விஜய் சேதுபதி. இது ஒருபுறமிருக்க விஜய் சேதுபதியின் இந்த முடிவு விஜய்யின் மாஸ்டர் படத்தை பாதித்துள்ளது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

முதலில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடித்தால் கண்டிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து விஜய் சேதுபதி எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியாது என்கிற அளவுக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன.

இதனால் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

vijay-vijay-sethupathy-master

vijay-vijay-sethupathy-master

ஒருவேளை விஜய்சேதுபதி, முரளிதரன் படத்தில் நடிக்க முடிவு செய்தால் மாஸ்டர் படத்தில் அவர் நடித்துள்ளதால் அதற்கு தனியாக பிரச்சனைகள் வரும்.

ஏற்கனவே விஜய் படத்திற்கு எப்படா பிரச்சனை பண்ணலாம் என ஒரு குரூப் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் இந்த செயல் விஜய்க்கு சோகத்தை கொடுத்துள்ளதாம்.

Continue Reading
To Top