fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு முரட்டு கேரக்டரா? சீக்ரெட் வெளியானதால் செம கடுப்பில் விஜய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு முரட்டு கேரக்டரா? சீக்ரெட் வெளியானதால் செம கடுப்பில் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டு தேதி கிடைக்காமல் அலைமோதிக் கொண்டு இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். நாளுக்கு நாள் செல்லச்செல்ல மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு சீக்ரெட்களும் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

தளபதி விஜய்க்கு வில்லனாக இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி உளறியதால் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் செம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பட வெளியீடு தள்ளி செல்லும் நேரத்தில் இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் உளறிக் கொண்டிருந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்பதே அவர்களது பிரச்சனை.

விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் என்பது தெரியும். ஆனால் எந்த மாதிரி வில்லன், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நல்லது செய்யும் நல்லவரா அல்லது படம் முழுக்கவும் வில்லனாக வருகிறார் என பலருக்கும் கேள்வி எழுந்தது.

அதற்கான விடையை சமீபத்திய பேட்டியில் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து விட்டார் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரம் என கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் ஏற்கனவே வெளியீடு எப்போது என தெரியாத நிலையில் இப்படி நாளுக்கு நாள் படத்தின் ஒவ்வொரு சீக்ரெட்டும் வெளியாவதால் என்ன செய்வதென்றே புரியாமல் முழிக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

Continue Reading
To Top