Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-stalin

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட இயக்குனரை வேண்டுமென்றே பலி வாங்கிய உதயநிதி.. குருவி பஞ்சாயத்தா இருக்குமோ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தவர் தான்.

அந்த வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்தது உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்த குருவி திரைப்படம்.

ஆசைப்பட்டு விஜய் படத்தை தயாரித்து பல கோடி நஷ்டமடைந்த உதயநிதி ஸ்டாலின் அதன்பிறகு விஜய்யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போதைய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ்க்கு பதிலாக முதலில் விஜய்க்கு படம் செய்ய இருந்தவர் மகிழ்திருமேனி தானாம்.

vijay-udhayanidhi-cinemapettai

vijay-udhayanidhi-cinemapettai

விஜய்யை சந்தித்து கூறிய அனைத்து கதைகளும் விஜய்க்கு பிடித்துவிட்டதால் உடனடியாக படம் செய்யலாம் என ஒப்புக் கொண்டாராம். ஆனால் ஏற்கனவே மகிழ்திருமேனிக்கு அட்வான்ஸ் கொடுத்த உதயநிதி அவரை விட மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இதில் தற்போது உதயநிதி, மகிழ்திருமேனி படத்தில் நடிக்காமல் நேராக ஆர்டிகல்15 என்ற ஹிந்தி ரீமேக்கிற்கு சென்றதால் மகிழ்திருமேனி தற்போது என்ன செய்வதென்றே புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாராம்.

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற கதைதான்.

Continue Reading
To Top