தேனாண்டாள் பிலிம்ஸ் செய்த திருட்டு வேலை.. கடுப்பாகி பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு கைகொடுத்த விஜய்!

தளபதி விஜய்யின் தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி தமிழ் சினிமாவில் அவரை வைத்து படம் தயாரிக்க அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதற்கு அடுத்ததாக மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி66 படத்தை தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது விஜய்க்கு அந்த நிறுவனத்துடன் படம் செய்ய விருப்பம் இல்லையாம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சில திருட்டு வேலைகள் செய்துள்ளதாக தெரிகிறது. தேனாண்டாள் நிறுவனத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத காஞ்சனா மற்றும் பேட்ட ஆகிய படங்களின் விநியோக உரிமை தனக்குத்தான் வரப்போகிறது என வெளிநாட்டு கம்பெனி ஒன்றை ஏமாற்றியுள்ளார்.

அவர்கள் தேனாண்டாள் முரளி செய்த தில்லுமுல்லு விஷயங்களை நேரடியாக விஜய்க்கு அனுப்பி விட்டார்களாம். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மீது தற்போது செம அதிருப்தியில் இருக்கிறாராம் விஜய்.

இதனால் தன்னுடைய பழைய தோல்வி படங்களின் தயாரிப்பாளரான மோகன் நடராஜன் மற்றும் சங்கிலி முருகன் ஆகியோரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு படம் செய்யலாம் என்ற பெயரில் ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

சங்கிலி முருகன் தளபதி விஜய்யின் 50வது படமான சுறா படத்தை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த படம் பெரிய அளவில் நஷ்டமடைந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாச்சலம் படத்தில் செய்ததைப் போல பழைய தயாரிப்பாளர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்காக இனிவரும் காலங்களில் படம் செய்யப் போகிறாராம் விஜய்.

இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெர்சல் மேஜிக் பையனுக்கு சம்பள பாக்கி வச்சி விஜய் பெயரா கெடுத்த ஆட்கள்தான!