Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏற்கனவே குறைச்சுட்டேன், இன்னும் எவ்வளவு குறைக்கணும்.. சன் பிக்சர்ஸ் மீது செம காண்டில் தளபதி விஜய்
தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் மொத்த பார்வையும் தளபதி விஜய் மீது தான் இருக்கிறது. ஏற்கனவே அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் பாதியை குறைத்து விட்டாராம் ரஜினிகாந்த்.
அதேபோல் தல அஜித் வலிமை பட தயாரிப்பாளருக்கு சம்பளம் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டாராம். ஆனால் விஜய் மட்டும் தற்போது வரை தன்னுடைய அடுத்த படத்துக்கான சம்பளத்தை பற்றி பேச்சே எடுக்கவில்லையாம்.
தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என பல மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுபற்றி விஜய் தரப்பிலோ அல்லது சன் பிக்சர்ஸ் தரப்பிலோ எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. ஆனால் முருகதாஸ் தான் இயக்குனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் சம்பளத்தில் பாதியை குறைக்கச் சொல்லி கேட்டார்களாம். ஆனால் விஜய் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் அதை சம்பளத்தை கொடுத்தால் போதும் மல்லுக்கட்டி உள்ளார்.
அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லையாம். 100 கோடி சம்பளம் பேசி இருந்ததில் பாதி 50 கோடி கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் விஜய் தற்போது தயாரிப்பு நிறுவனத்தையே மாற்றப் போவதாக அரசல் புரசலாக செய்திகள் கிடைத்துள்ளது.
இனி வருங்காலத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விஜய் படம் பண்ணப் போவதில்லை என்கிற மாதிரிதான் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் சினிமா நிலைமை சீரான பிறகு தாராளமாக சன் பிக்சர்ஸ் படத்தில் நடிப்பார் என்கிறது அவரின் வட்டாரம்.
