Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-murugadoss-next-movie-2020

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் பொறுமையை சோதிக்கும் முருகதாஸ்.. தளபதி65 படக்கதையில் சொதப்பல்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

2021ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க உள்ளார் விஜய்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். தளபதி65 படத்தை இயக்க பல இளம் இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில் இடையில் புகுந்து வாய்ப்பை தட்டிப் பறித்தார் முருகதாஸ்.

சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறிய முருகதாஸின் கதையின் முதல் பாகம் சூப்பராக இருக்கிறது எனவும், இரண்டாம் பாகம் படு சொதப்பலாக இருப்பதாகவும் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்கான வேளையில் தற்போது முருகதாஸ் இருந்து வருகிறாராம். இதுவரை இரண்டாம் பாகத்தில் எந்த ஒரு காட்சியும் தளபதி விஜய்யை திருப்திப்படுத்த வில்லையாம்.

vijay-thalapathy65

vijay-thalapathy65

இதனால் தான் படத்தின் அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாக இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள். இளம் இயக்குநர்கள் நிறையப்பேர் இருக்கும்போது தளபதி விஜய் ஏன் முருகதாஸை நம்பிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தான் தெரியவில்லை.

Continue Reading
To Top