தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் அண்மையில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இருக்கும் புகைப்படங்கள் செம ஹிட்.

இப்படம் சம்பந்தமான எந்த தகவலும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள அட்லி தலைமையிலான ஒரு தனி அணி இயங்கி வருகிறது. ஆனால் அப்படியும் விஷயங்கள் கசிவதால் அந்த அணியில்தான் ஒரு கருப்பு ஆடு ஒளிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே அட்லியை அழைத்த விஜய், இந்த விஷயத்தில் யாரை நம்பவேண்டும் என்பதில் கவனமாக இரு என அட்வைஸ் செய்தாராம்.