Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிரை பணையம் வைத்து தளபதி செய்த சண்டை காட்சிகள்.. மிரள வைக்கும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர் தளபதி விஜய். இவருடைய பிரம்மிப்பூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் தளபதி இதுவரை நடித்த பல படங்களில் டூப் இல்லாமல், அவரே ரிஸ்க் எடுத்து நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் தளபதி விஜய் ‘வேலாயுதம்’ படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சி ஒன்றில், 150 அடி உயரத்தில் ஓடும் ட்ரெயினில் ஒரு பிரிட்ஜில் சுத்தி சுத்தி ஃபைட் பண்ண விஜயை பார்த்த இயக்குனரும் ஸ்டண்ட் மாஸ்டரும் வியந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஹிட் படமான ‘குஷி’ படத்தில் கூட தளபதி விஜய் நியூசிலாந்தில் கவரா பிரிட்ஜ் மேல ஸ்டண்ட் மேன் யாரோட ஹெல்ப்பும் இல்லாமல் பன்கி ஜம்பிங் பண்ணி இருப்பாரு விஜய்.

பன்கி ஜம்பிங் பண்றது ஒன்றும் அதிசயம் இல்லை ஆனா, அந்த சமயத்துல அவர் மூஞ்சியில துளிகூட பயமில்லை என்பதுதான் ஆச்சரியம். இந்த படத்தில் ஜோதிகாவும் பன்கி ஜம்பிங் ட்ரை பண்ணாங்க. ஆனா ஜம்ப் பண்றப்ப அவங்க மூஞ்சில பயம் இருந்ததால், அந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதே மாதிரி ‘தெறி’ படத்திலும் விஜய் 100 அடியில் இருக்கும் பிரிட்ஜில் இருந்து தண்ணீரில் ஜம்ப் பண்ணிருப்பாரு. அதுவும் டூப் இல்லாமல் எடுக்கப்பட்டது தான்.

மேலும் தளபதி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தபோது ஒகேனக்கல் ஃபால்ஸ் நடுவில் தொங்கபட்ட கூண்டை தாவிபிடிக்கும் காட்சியை டூப் இல்லாமல் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

அதே போல் தான் ‘பத்ரி’ படத்திற்காக விஜய் செய்த பிராக்டிஸ் எல்லாம் படத்தின் முடிவில் காட்சிப்படுத்தியிருந்தது மூலம் விஜய்யின் டெடிகேஷன் சினிமா துறையையே வியக்க வைத்தது.

எனவே தனது ஒவ்வொரு படங்களிலும் அவருடைய ஈடுபாட்டை முழுமையாக கொடுத்து ரசிகர்களை ஏமாற்றாமல் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தளபதி விஜய்.

இதனால் சாதாரணமாகவே தெறிக்கவிடும் விஜய் ரசிகர்களுக்கு இந்த வீடியோ கைல கிடைச்சதுக்கு தலை கால் புரியாம ஆட்டம் போட்டு வருகின்றனர்.

முழு வீடியோ பார்க்க: Click Here

Continue Reading
To Top